இதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி

ஸ்கிப்பிங் பயிற்சி என்பது முழு உடலுக்கான பயிற்சி. தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

ஸ்கிப்பிங் பயிற்சி உடலில் உள்ள உறுப்புகளும் நரம்புகளும் சீராக செயல்படும். மேலும் இந்த பயிற்சி இதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும்.

jump rope exercise benefits

தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றத்தை கொடுக்கும்.

Advertisement

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறையும். முதுகெலும்பு பலம் பெறும்.

நடைப்பயிற்சி செய்யும் போது நிமிடத்திற்கு 5 கலோரிகள்தான் எரிக்கப்படுகிறது. ஆனால் ஸ்கிப்பிங் பயிற்சி 15 முதல் 20 கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஒரு மணி நேர ஸ்கிப்பிங் பயிற்சி 1,300 கலோரிகளை கரைத்து வெளியேற்றும்.

தொப்பைப் பிரச்சனை உள்ளவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் தொப்பைப் பிரச்சனை படிப்படியாக குறையும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறை வாங்குங்கள். ஸ்கிப்பிங் கயிறை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்ள வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை செய்தாலே போதும்.