நாடும் நாட்டு மக்களும்.. சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர் – ரெடியாகும் காமெடி சரவெடி!

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, மே 1 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். நளன் குமாரசாமி இயக்க, பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரித்து வெளியிட்ட இந்த திரைப்படம், ஹீரோயிசம் என்ற ஒரு வார்த்தையை வேறு ஒரு பரிமாணத்தில் ரசிகர்களை பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல.
மக்கள் செல்வனின் சினிமா வரலாற்றில் அவருக்கு மிகச் சிறந்த பிரேக் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும் என்பதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து தற்பொழுது இந்த படத்தை அர்ஜுன் என்பவர் இயக்க, மீண்டும் ஐயா குமார் இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்யவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர், “நடன சுனாமி” மிர்ச்சி சிவா நடித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியான நிலையில் நேற்று மே 1ம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சூது கவ்வும் பார்ட் 2 – நாடும் நாட்டு மக்களும்.. என்ற தலைப்புடன் இந்த படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது மும்முரமாக நடந்து வருகிறது.