என்னுடைய கார் சாவி காணவில்லை.. சௌந்தர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் சுமார் 100 சவரன் தங்கம், 30 கிராம் வைர நகைகள், நவரத்தின நகை செட்டுகள், சுமார் 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடு போனதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணி செய்து வந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண்ணும், வெங்கடேசன் என்ற ஓட்டுநரும் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்து.
ஈஸ்வரி அந்த வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், திருடு போனது கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் வேலையில் இருந்து விலகி விட்டார் என்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை கொண்டு அவருடைய குடும்பத்தினருக்கு பல நன்மைகளை அவர் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.
இதுஒருபுரம் இருக்க, தற்போது சூப்பர் ஸ்டார் அவர்களின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புதிய புகாரை அளித்துள்ளார். இதில் தனது காரின் மற்றொரு சாவி தனது பவுச்சுடன் காணவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்ற பொழுது சாவி காணாமல் போனதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.