வருகிறது சுக்கிர பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம்..!

வரும் மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் திகதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார்.

சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

Advertisement

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு புதிய உத்தி அல்லது விரிவாக்கத்திலும் முதலீடு செய்ய வேண்டாம். ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்கள் செல்வாக்கு பெறும் வெற்றியைத் தரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணியும் பாராட்டப்படும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் குறையும். வணிகர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள்.

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் தந்தைக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் தாயுடன் சில மோதல்களையும் வாக்குவாதங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய உத்திகள் சில மாற்றங்களை கொண்டு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழிலில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே தொழிலதிபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடன் வாங்க வேண்டாம். திருமணமாகாதவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். தொழிலில் உயர்வதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.