Search
Search

நவரசா : யோகி பாபுவின் சம்மர் ஆஃப் 92 விமர்சனம்

navarasa 9 review

யோகி பாபு நடித்திருக்கும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வீரஜ் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யோகி பாபு படித்த பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அழைப்பை ஏற்றுக்கொண்ட யோகிபாபு விழாவில் கலந்துகொள்ள வருகிறார்.

விழாவில் பேசும் யோகிபாபு, தான் பள்ளியில் படித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். யோகிபாபுவின் பள்ளிப்பருவ ஆசிரியரான ரம்யா நம்பீசன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவர் அப்படி இருப்பதற்கு யோகிபாபுவும் ஒரு காரணம். அது என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

navarasa 9 review

காமெடி நடிகராக வரும் யோகிபாபு சிறிது நேரமே வந்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. ஆசிரியராக வரும் ரம்யா நம்பீசன் இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என இரண்டிலும் கச்சிதமாக நடித்துள்ளார். யோகிபாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

‘நகைச்சுவை’என்ற உணர்வை மையமாக வைத்து பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது.

You May Also Like