Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு

ஆன்மிகம்

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு

ஊர்: அண்பில்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி.
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : சுந்தர்ராஜப் பெருமாள்
தாயார் : அழகிய வல்லி
ஸ்தலவிருட்சம் : தாழம்பூ
தீர்த்தம்: மண்டுக தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்: மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00மணி முதல் இரவு 8:00 மணி வரை.

temple in tamilnadu

ஒரு சமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கு நாம்தான் காரணம் என்ற கர்வம் உண்டானது. மேலும் அணைத்து ஜீவராசிகளையும் படைக்கும் நம்மை யாரும் வணங்குவதில்லை என்ற ஆதங்கமும் இருந்தது . ப்ரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு ,அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். பிரம்மனோ கேட்பதாக இல்லை. எனவே,அவரை பூலோகில் மனிதராக பிறக்கும் படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு .

பூலோகம் வந்த பிரம்மா எல்லா தலங்களுக்கும் சென்று ஸ்வாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்து, ஸ்வாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன் வந்தார்.

அவரை கண்ட பிரம்மா,”இவ்வளவு அழகாக எவரையும் இதுவரையில் நான் கண்டதில்லையே என்று எண்ணி,நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்னு,” அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இரண்டு குணங்களையும் கொண்டு இருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை’என உபதேசம் செய்து பள்ளி கொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் விஷ்னு.

உண்மையை புரிந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோவில் காட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்னு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் ”அன்பில்’ என்ற பெயரும் பெற்றது.

108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். சுவாமி கருவறையில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார்.

சுதபா எனும் மகரிஷி தன் தவ வலிமையால் நீரிலும்,நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.ஒரு நாள் தண்ணீருக்கடியில் விஷ்னுவை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாசமுனிவர் வந்தார். துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேர காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் அவருக்கு மண்டுகர் என பெயர் ஏற்பட்டது.

சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே சாபத்திற்கு துர்வாசர் விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம்,”உனக்கு கிடைத்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க பெற்று சாபவிமோசனம் பெறுவாய்,’என்றார். அதன்படி மண்டுகர், சுவாமியை எண்ணி இங்குள்ள தீர்த்தத்தில் தவம் செய்து வந்தார். பெருமாள் அவருக்கு சுந்தர்ராஜாவாக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

முன்மண்டபத்தில் ஆண்டாள் தனி சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறார். திருமணதோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top