Search
Search

சூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்

செய்முறை

சூரிய முத்திரைக்கு பத்மாசனமும், சித்தாசனமும் சிறந்தவையாகும்.

மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மோதிர விரலும் கட்டை விரலும் இணையும் போது நம்மிடம் ஒரு விஷேச சக்தி உருவாகிறது.

சூரிய முத்திரையை குறைந்தது 8 நிமிடங்கள் செய்ய வேண்டும். நீண்ட நேரம் செய்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். குளிர்காலத்தில் இதனை 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.

பலன்கள்

  • உடலில் வலிமை அதிகரிக்கும்.
  • உடல் முழுவதும் சக்தியும், உஷ்ணமும் பரவும்.
  • உடல் ஸ்திரத்தன்மை பெரும்.
  • உடல் எடை குறையும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • கொழுப்புக்கள் கரையும்.
  • பசியைத் தூண்டும்.
  • செரிமானத்துக்கு உதவும்.
  • சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

எச்சரிக்கை : உடல் பலவீனமானவர்கள் இந்த முத்திரையை செய்யாமல் இருப்பது நல்லது.

Leave a Reply

You May Also Like