கற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்? ஏதற்க்காக?

கோழியின் இரைப்பையில் சிறு சிறு கற்கள் நிறைய இருப்பதனை கோழியை உணவுக்காக அறுப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஏன் கோழியின் வயிற்றில் மட்டும் இதுபோன்ற கற்கள் உள்ளன என்று தெரியுமா?
கோழியேதான் தனது தீனியை உண்ணும்போது மிகச்சிறிய கற்களையும் சேர்த்து விழுங்குகிறது.
காரணம், தான் உண்ணும் உணவு இரைப்பையில் நன்கு அரைப்பட்டு ஜீரணமாவதற்கு சற்று அதிகமான உராய்வு கிடைக்க வேண்டும் என்றே கோழியை இக்கற்களை விழுங்குவது என்ற அதிசயம் தெரியவந்துள்ளது.
புறா போன்ற சிறு பறவை வகைகளும் மிகவும் வயதடைந்து பறக்க இயலாத நிலை வரும் பொழுது விசித்திரமான முறையில் தற்கொலை செய்து கொள்வதுண்டு எனப் பறவையிலாலர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்ந்த மரக்கிளைகளில் இப்புறாக்கள் நிறைந்த அளவில் கற்களை சேமித்து பின் ஒவ்வொன்றாக விழுங்கிவிட்டு அந்த உயரத்திலிருந்து பறக்க முயலும், ஆனால் பளு அதிகமாகிவிட்ட பறவைகள் கீழுள்ள பாறைகள், கற்கள் இவற்றின் மேல் மோதி இறந்துவிடுகிறது. இது இயற்க்கையில் ஒரு சாதாரண விஷயம்தான் என்றாலும் அதன் பௌதீக அறிவினை கண்டு நம்மை வியக்க வைக்கிறது.