நடிகை சமந்தா.. பிறந்தநாளில் கோவில்கட்டி, கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்!

நடிகை சமந்தாவிற்கு தமிழ் துறையில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலேயே பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. சென்னையில் பிறந்த இவர், ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தினால் படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்தார்.
அதன் காரணமாக முதல் முதலில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அந்த முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழில் இவர் கதையின் நாயகியாக அறிமுகமான திரைப்படம் பானா காத்தாடி, தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
இறுதியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படம் தான். தற்பொழுது தமிழ் படங்களின் மீது பெரிய அளவில் ஆர்வம் காட்டாத சமந்தா தொடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்த வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் ஆந்திராவை சேர்ந்த இவருடைய ரசிகர் ஒருவர் இவருக்கு கோவில் கட்டி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சமந்தாவிற்காக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.