உங்களுடைய கனவில் கோவிலை காணும் போது அன்று இரவு என்ன காரியம் நடக்க வேண்டும் என நினைத்துவிட்டு படுத்தீர்களோ அது நடக்கும்.
கோவிலில் பூக்களைப் பெறுவது போல் கனவு காண்பது என்பது நீங்கள் வெற்றியை அடைகிறீர்கள் என்பதாகும்.
கோவிலுக்குள் செல்ல முடியாமல் மக்கள் கூட்டத்தில் மாட்டிக்கொள்வது போல கனவு வந்தால் நீங்கள் எதிர்பாராத சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வீர்கள் என்று அர்த்தம்.
கோவிலில் நீங்கள் மட்டும் தனியாக இருப்பது போல கனவு வந்தால் நீங்கள் செய்துவரும் தொழிலில் பிரச்சனை வரும் என அர்த்தம்.
கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் கடவுள் துணை எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
உங்கள் கனவில் கோவில் கோபுரத்தை கண்டால் நீங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறீர்கள் என அர்த்தம். திருநீறு பூசுவது போல கனவு வந்தால் நல்ல ஞானம் கிடைக்கும்.
உங்களுடைய கனவில் முருகப்பெருமானை கண்டால் அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
விநாயக பெருமானை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் திடீர் பண வரவுகள் இருக்கும்.
கடவுளுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு காண்பது, சில சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதைக் குறிக்கலாம்.