தளபதி 68.. தல Cameo ரோல் பண்ணா எப்படி இருக்கும்? – வெங்கட் சொன்ன பதில் என்ன?

தமிழ் சினிமாவில் தற்பொழுது பல முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து பரபரப்பாக உருவாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதியின் அடுத்த திரைப்படமான 68வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அண்மையில் வெளியானது.
வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை இயக்க, சுமார் 20 ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்தில் ஒன்றிணைய உள்ளனர். இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபுவிடம் தல அஜித் அவர்களும் தளபதி விஜய் அவர்களும் ஒன்றிணைந்து நடிக்க வேண்டும் என்பது உங்கள் தந்தை கங்கை அமரன் அவர்களுடைய ஆசை.
இந்த படத்தில் அது நிறைவேறுமா என்று கேட்ட பொழுது, தளபதி விஜய் மற்றும் தல அஜித் இணைந்து நடிப்பது ஒரு மாபெரும் விஷயமாக இருக்கும். இருப்பினும் இந்த திரைப்படத்தில் அஜித் அவர்கள் நடிக்கவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார் வெங்கட் பிரபு.