டீசரை பார்த்து வாழ்த்து சொன்ன தளபதி.. ஒருவேளை அவரே டீசர் ரிலீஸ் பண்ணுவாரோ?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி உள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இது ஒரு பீரியட் படம் என்பதை நாம் அறிவோம், மாறுபட்ட மூன்று வேடங்களில் விஷாலும், மாறுபட்ட இரு வேடங்களில் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களும் நடித்து கலக்கி உள்ள ஒரு திரைப்படம்.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தை குறித்த பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது, குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியான எஸ்.ஜே சூர்யா அவர்களின் ஒரு போஸ்டரும் விஷால் அவர்களுடைய போஸ்டரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் #ThalapathyvijayforMarkAntony என்று குறிப்பிட்டுள்ளது, ஆகையால் தளபதி விஜய் இந்த படத்தின் டீசரை இன்று மாலை வெளியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
நடிகர் விஷால், தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காண்பித்துள்ளார் என்ற தகவலையும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.