KGFல் நடைபெறும் படப்பிடிப்பு.. மே மாதம் தான் டார்கெட் – தங்கலான் கமிங் சூன்!

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் முதன் முதலில் நடிக்கும் திரைப்படம் தான் தங்கலான். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் கூறியுள்ளார்.
கோலார் தங்க வயலில் (KGF) சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும் இன்னும் 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு வேலைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் மே மாத இறுதிக்குள் முழுவதுமாக படப்பிடிப்பு முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் படம் மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் இந்த படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் VFX பணிகள் அதிகம் இருப்பதால் அதை முடிக் அதிக நேரம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நிச்சயம் இது மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். சமூக கருத்துக்களை தனது படத்தில் தயங்காமல் அளிக்கும் ரஞ்சித்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.