தர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்

வறண்ட பகுதிகளில், தருப்பை கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தருப்பையில் குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விசுவாமித்திரம், யவை ஏழுவகை உண்டு

தர்ப்பைப் புல்லை எடுத்து சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீர்விட்டு காய்ச்சி அதனை குடித்து வந்தால் உடல் அரிப்பு தாகம் ஆகியவை நீங்கும்.

தர்ப்பை புல்லை கஷாயமாக தயார் செய்து, வாரம் ஒரு முறை 50 மில்லி அளவு குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

தர்ப்பைப் புல்லின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அந்த பொடியை பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். பித்தத்தை தணிக்கும்.

இந்த பொடியுடன் கீழாநெல்லி பொடியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலையை குணமாக்கும். ஈரல் வலிமை பெறும்.

தர்ப்பைப்புல் நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை பாலில் கலந்து குடித்து வந்தால் தாய்மார்களுக்கு அதிகமாக பாலை சுரக்க செய்யும்.

தர்ப்பைப்புல்லின் வேரை பொடி செய்து அதனை தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.

தர்ப்பைப் புல்லின் பொடியை மோரில் கலந்து குடித்து வந்தால் சீதக்கழிச்சல் குணமாகும்.

தர்ப்பைப் புல்லை கைப்பிடி அளவு எடுத்து அதில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி, 250 மில்லி லிட்டர் ஆனவுடன் அதனை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும். மேலும் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, உடல் வெப்பம் ஆகியவை நீங்கும்.

தர்ப்பைப்புல் கசாயத்தை தினமும் குடித்து வந்தால் தோலில் ஏற்படும் கொப்பளம் சரியாகும். உடல் அரித்து தடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Recent Post