பொன்னியின் செல்வன் எப்படி உருவானது? நாளை வெளியாகும் ஒரு சூப்பர் Surprise!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 150 நாட்கள் படபிடிப்பு நடத்தப்பட்டு, சென்ற ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. மேலும் இந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் வெளியாக உள்ளது.
கவிஞர் கல்கி அவர்கள் எழுதிய வரலாற்று புனைவு கதை தான் பொன்னியின் செல்வன், இதை படமாக எடுக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொடங்கி பலர் யோசித்து தற்பொழுது மணிரத்தினம் அவர்கள் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களை கொண்டு எடுத்து முடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை வெளியீடும் நடந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் எப்படி உருவானது என்பதை இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளும் அவர்களே கூறும் ஒரு சிறப்பு வீடியோ உருவாகியுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்த வீடியோ, படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற காட்சிகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த மாபெரும் பிரம்மாண்டம் உருவான விதத்தைக் காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.