Search
Search

பஸ் மீது பாய்ந்து கண்ணாடியை உடைத்த இளைஞர் – வைரல் வீடியோ

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராஜேஷ். இவர் நேற்று மாலை 5 மணியளவில் சாலையில் வந்துக்கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடினார். அப்போது பேருந்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்த முயன்ற போது ராஜேஷ் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது பலமாக மோதினார்.

இதில் பலத்த சத்தத்துடன் பேருந்து கண்ணாடி உடைந்தது. ராஜேஷ் சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். கால்பந்து வீரர் நெய்மரின் தீவிர ரசிகராக இருக்கும் இவர் மனநலம் பாதிப்பு காரணமாக இதுப்போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த நபரை கோழிக்கோட்டில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

You May Also Like