Search
Search

தாய்ப்பால் இயற்கையாக சுரக்க அருமையான 15 குறிப்புக்கள்

breastfeeding increase tips in tamil

தாய்ப்பால்தான் ஒரு குழந்தையின் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்தாகும். ஆனால் சில தாய்மார்களுக்கோ சரியாக பால் சுரப்பது இல்லை. இயற்கையாக பால் சுரப்பதற்கு நம் முன்னோர்கள் சில இயற்கை மருத்துவத்தை நமக்கு வழிவகுத்துள்ளார்கள். அதில் சிறந்த 15 குறிப்புகள் இதோ உங்களுக்காக.

கல்யாண முருங்கை இலையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பாசி பருப்புடன் கலந்து நன்றாக சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.

பூண்டுடன், முருங்கை பூவை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் பால் பெருகும்.

ஆலமரத்தளிரை எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர பால் நன்று சுரக்கும்.

சீரகத்தை பொடியாக்கி வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வர பால் சுரப்பு கூடும்.

breastfeeding increase tips in tamil

புழுங்கலரிசி, கோதுமை, வெந்தயம் இவை மூன்றையும் எடுத்து பொடியாக்கி கஞ்சியாக வைத்து சாப்பிட பால் சுரக்கும்.

கைப்பிடி ஆமணக்கு இலைகளை எடுத்து நீரில் போட்டு வேக வைத்து இறக்கி மிதமான சூட்டில் மார்பில் வைத்து ஓத்தடம் கொடுத்து, இலைகளை மார்பில் வைத்து கட்டிவர பால்சுரப்பு உண்டாகும்.

இலுப்பை இலைகளை மார்பில் வைத்து கட்டி வந்தாலும் பால்சுரப்பு கூடும்.

அம்மான் பச்சரிசி செடியை பூ, இலையோடு எடுத்து வந்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் கொட்டை பாக்களவு போட்டு கலக்கி குடிக்க பால் பெருகும்.

தாளிக்கீரையை கொதிநீரில் போட்டு வெந்ததும் பிசைந்து காலை, மாலை சாப்பிட்டு வர பால்சுரப்பு கூடும்.

வெந்தயத்தை வேகவைத்து கடைந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.

பப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் பால் சுரப்பு பெருகும்.

அதிமதுரத்தை இடித்து தூளாக்கி, தூளை தேனில் கலந்து உண்டுவர தாய்ப்பால் சுரக்கும்.

Leave a Reply

You May Also Like