TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

திருவண்ணாமலை கோவில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
திருவண்ணாமலை கோவில் வரலாறு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளன.

இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும்.

இதையும் படிங்க

varaha swamy temple

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

April 25, 2025
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

April 25, 2025
குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

April 20, 2025

“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது.

இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இத்தலத்தில் உள்ள மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் இந்த மலையையே சிவலிங்கமாக கருதி வழிபட்டுள்ளனர்.

கார்த்திகை மாதத்தின் மிகப்பெரிய விசேஷங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தீபம் இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படும். கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் அருகேயுள்ள தீபக்கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் பார்க்கலாம்.

இக்கோயிலில் முருகன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், திருமால், பைரவர், பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

திருவண்ணாமலை கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகாதீபம் விழாக்கள் நடைபெறுகின்றன.

கோபுரங்களும் அதன் உயரமும்:

  • கிளி கோபுரம் – 81 அடி உயரம்
  • தெற்கே திருமஞ்சன கோபுரம் – 157 அடி உயரம்
  • தெற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம்
  • மேற்கே பேய் கோபுரம் – 160 அடி உயரம்
  • மேற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம்
  • வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் – 171 அடி உயரம்
  • வடக்கு கட்டை கோபுரம் – 45 அடி உயரம்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்:

  1. இந்திரலிங்கம்.
  2. அக்னி லிங்கம்.
  3. எமலிங்கம்.
  4. நிருதி லிங்கம்.
  5. வருண லிங்கம்.
  6. வாயுலிங்கம்.
  7. குபேர லிங்கம்.
  8. ஈசான லிங்கம்.

கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • ஞாயிற்றுக்கிழமை – சிவலோக பதவி கிட்டும்.
  • திங்கள்கிழமை – இந்திர பதவி கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும்.
  • புதன்கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
  • வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.
  • சனிக்கிழமை – பிறவிப் பிணி அகலும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

Tags: சிவன் கோவில்கள்
ShareTweetSend
Previous Post

இடி, மின்னலின் போது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Next Post

சேலம் முத்துமலை முருகன் கோவிலின் சிறப்புகள்

Next Post
Salem Muthumalai Murugan Temple

சேலம் முத்துமலை முருகன் கோவிலின் சிறப்புகள்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா
லைஃப்ஸ்டைல்

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி – எப்போது...

by Tamilxp
May 5, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
May 4, 2025
new-rules-for-indian-railways-ticket-bookings-for-passengers
தெரிந்து கொள்வோம்

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல் – என்னென்ன தெரியுமா?

இந்தியாவின் முக்கிய போக்குவரத்து முறை என்றால்...

by Tamilxp
May 4, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.