Search
Search

தளபதி 68.. விஜய்க்கு சம்பளம் 200 கோடி? – எல்லாம் “லியோ” செய்த தரமான சம்பவமா?

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை தங்கள் வசம் வைத்திருக்கும் இரு மாபெரும் நடிகர்கள் யார் யார்? என்று பார்த்தால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என்று நாம் அனைவரும் கூறுவோம்.

ஆனால் இந்த காலகட்டத்தில் அவர்களுடைய மார்க்கெட் கூட சற்று குறைவாகத் தான் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சகட்ட புகழையும், மார்க்கெட்டையும் பிடித்திருக்கும் ஒரு நடிகர் தான் தளபதி விஜய்.

ஆனால் இது அவர் ஓரிரு ஆண்டுகளில் செய்த சாதனை அல்ல, கடந்த 30 ஆண்டுகளாக பல லட்சம் விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு இந்த இடத்தைப் படித்துள்ளார் விஜய். இந்நிலையில் அவர் அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் தனது 68வது திரைப்படத்திற்கு சம்பளமாக சுமார் 200 கோடி ரூபாய் வாங்க உள்ளார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இது ஏறத்தாழ உண்மை என்று பிரபல சினிமா விமர்சகர் “வலைப்பேச்சு” அந்தணன் கூறியுள்ளார், இதற்கு முக்கிய காரணம் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலேயே உருவாகி வரும் லியோ திரைப்படம் தான் என்றும். ஏற்கனவே அந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like