வனம் (2021) திரை விமர்சனம்
வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஆனந்த் படத்தை இயக்கியுள்ளார். கோல்டன் ஸ்டார்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரான் ஈதன் யோஹான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை
வனப்பகுதியில் புதிதாக ஒரு நுண்கலை கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது. கல்லூரி விடுதியில் குறிப்பிட்ட அறையில் தங்கியுள்ள மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று வெற்றியும் சுமதி வெங்கட்டும் ஆராய்கிறார்கள்.
அதன் பிறகுதான் இது ஒரு ஜமீன்தாரின் வெறியாட்டம் என்பது தெரிய வருகிறது. ஜமீனுக்கு அந்த கல்லூரிக்கும் என்ன தொடர்பு? குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் கதை.
8 தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றி இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுசித்தாரா மல்லி என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
ஒரு ஜமீன் கதையிலிருந்து ஆரம்பித்து பிறகு தற்காலத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவத்தை இனைத்து ஒரு சுவாரசியமான படத்தை எடுத்து இருக்கின்றனர். 1960 மட்டும் 2020 என இருவேறு காலகட்டங்களில் கதை நகர்கிறது. பெரும்பாலான காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது.
புலிகள் திரியும் நடுக் காட்டுக்குள் கல்லூரி ஒன்றைக் கட்டவேண்டுமென பரிகாரம் சொல்வதெல்லாம் சுத்தமாக ஏற்க முடியவில்லை. படத்தின் கதை சுவாரசியமாக இருந்தாலும் அதன் திரைக்கதை வலுவில்லாமல் இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவு அருமை. பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லையென்றாலும் பின்னணி இசை ஓரளவு பொருந்துகிறது. நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில் சற்று சொதப்பி இருக்கிறார்.
