Search
Search

கடும் நஷ்டத்தை சந்தித்த வாரிசு…உண்மையை உடைத்த பிரபலம்..!

varisu thirai vimarsanam

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதே நேரத்தில் வசூலை வாரி குவித்தது. ஆனாலும், இப்படம் லாபமா நஷ்டமா என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் வாரிசு படம் குறித்து பேசியுள்ளார். அப்போது ‘வாரிசு திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தான்’ என கூறியுள்ளார்.

இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You May Also Like