வேலன் விமர்சனம்
இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, சூரி, மரியா வின்சென்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிரபுவின் குடும்பம் ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறது. இவர்களின் மகனாக வரும் நாயகன் முகேன். அங்குள்ள கல்லூரியில் சேருகிறார். ங்கு வரும் நாயகி மீனாட்சியை கண்டதும் காதலிக்க தொடங்குகிறார்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கேரளாவில் எம் எல் ஏ-வாக இருக்கும் ஹரீஷ் பெராடி மூலம் பிரச்சனை ஏற்படுகிறது. மறுபுறம் முகேனிற்கும் மற்றொரு நாயகியாக வரும் மரியாவிற்கு திருமணம் நடைபெறும் என பிரபு வாக்கு கொடுத்து விடுகிறார்.
இறுதியாக முகேனிற்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததா.? வில்லன் ஹரீஷ் பெராடியை எப்படி சமாளித்தார்கள்..? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக வரும் பிக்பாஸ் முகேன், அறிமுகக் காட்சித் தொடங்கி பள்ளி வாழ்க்கை, கல்லூரி காலம் , காதல் அதிரடி என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். நாயகி மீனாட்சி, கேரள பெண்ணாக ஜொலிக்கிறார்.
இடைவேளை காட்சியில் வரும் சூரி நிஜமாகவே மறுபடியும் காமெடியனாக மிளிர்கிறார். தந்தையாக வரும் பிரபு தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ப்ராங்க் ஸ்டார் ராகுலின் காமெடி பெரிதளவில் கவனம் பெறவில்லை. வழக்கமான குடும்ப கதை தான் என்றாலும், இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகளோடு படம் நகர்கிறது.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. சரத்குமாரின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
