Search
Search

வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மேலும் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

venthu thaninthathu kaadu thirai vimarsanam

படத்தின் கதை

நாயகன் சிம்பு தனது அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சிம்பு காட்டில் வேலை செய்யும் போது திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்தக் காட்டின் உரிமையாளருக்கும் சிம்புவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் சிம்புவின் தாய் ராதிகா அவரை மும்பைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.

தன்னை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக கூறிய சிம்புவின் மாமா திடீரென தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போகிறார். மும்பைக்கு செல்லும் சிம்பு அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சேர்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிம்பு ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளார்.

கதாநாயகியாக வரும் சித்தி இத்தானி முதல் படத்திலேயே அழகான நடிப்பை கொடுத்துள்ளார். சிம்புவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

கௌதம் மேனனின் திரைக்கதை மற்றும் இயக்கம் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சி இரண்டையும் தரமான முறையில் கொடுத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை கூடுதல் பலம்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் வெற்றி பெற்று விட்டது.

You May Also Like