வேப்ப மரத்தின் பயன்கள்

இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள மரமாக வேப்ப மரம் உள்ளது. வேப்பமரம் மருத்துவ குணங்களை கொண்டது. வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும்.

வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும் அதன் காற்றை சுவாசிப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. வேப்பங் குச்சியால் தினந்தோறும் பல் துளைக்கினால் பற்கள் வலிமை பெறுவதோடு, ஈறுகள் பிரச்சனையும் இருக்காது. கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

வேப்பம் பூ

உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி வேப்பம் பூவுக்கு உள்ளது. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

வேப்பம் பழம்

வேப்ப மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும். அதனை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றில் உள்ள கசப்பு சுவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

வேப்பிலை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பருக்கள், கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.

Recent Post