வசூலில் மாஸ் காட்டும் விடுதலை – இது வரை வந்த மொத்த வசூல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான படம் விடுதலை. இப்படத்தின் மூலம் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வாரம் இறுதிக்குள் எதிர்பார்க்கமுடியாத அளவிற்கு வசூல் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.