மீண்டும் ரிலீஸ் ஆகும் விடுதலை பாகம் 1.. இந்த முறை இயக்குநரின் பார்வையில்!

கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி உலக அளவில் வெளியாகி மிக மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம் 1. குறைந்த நேரமே தோன்றினாலும் தனக்கே உரித்தான மாஸ் ஸ்டைலில் நடித்து அசத்தியிருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
அதே நேரத்தில் ஒரு காமெடி நடிகர் ஆக்சன் ஹீரோவாக மாறினாள் அது இப்படித்தான் இருக்கும் என்பதை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கின்ற பழமொழிக்கு ஏற்றவாறு நடித்து டபுள் மாஸ் காட்டி இருந்தார் நடிகர் சூரி.
விமர்சனங்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்பொழுது OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதிலும் கூடுதல் மகிழ்ச்சியாக திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டு இயக்குநரின் பார்வையில் (Directors Cut) OTTயில் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 28ம் தேதி Zee 5 தளத்தில் தற்போது ரசிகர்கள் இந்த படத்தை கண்டு மகிழலாம்.