விமர்சனங்களை தாண்டி தூள் பறக்கவிட்ட விஜய் ஆண்டனி – பிச்சைக்காரன் 2 வசூல் ரிப்போர்ட்!

விஜய் ஆண்டனி முதல் முறை இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2, ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவருடைய பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்த படம் உருவாகி வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர்கள் ராதாரவி, Y.G மகேந்திரன், மன்சூரலிகான் மற்றும் நாயகி காவியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த மே 19ம் தேதி உலக அளவில் வெளியாகி முதலில் சற்று மந்தமான விமர்சனங்களை பெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் 3.25 கோடியும், தெலுங்கில் 4.5 கோடியும் இந்த படம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனினுடைய திரைப்பட வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணியில் விஜய் ஆண்டனிக்கு பெரிய விபத்து ஏற்பட்டு, தடை மற்றும் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கத்து.