மக்களே ரெடியா? ட்ரைலர் வந்துகிட்டே இருக்கு – ரிலீசுக்கு காத்திருக்கும் பிச்சைக்காரன் 2!

சின்ன பாப்பா பெரிய பாப்பா, 2000மாவது ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நாடகம் தான் இது. 90ஸ் கிட்ஸ் நிச்சயம் இந்த நாடகத்தை மறந்திருக்கமாட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தின் டைட்டில் சாங் பாடியது வேறு யாரும் அல்ல இன்று மாபெரும் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி தான். அன்று தொடங்கிய அவரது கலைப்பயணம் தற்பொழுது வரை சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.
2005ம் ஆண்டு வெளியான சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக மற்றும் பாடகராக இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “நான்” என்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக 2012ம் ஆண்டு தோன்றினார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ஐந்து திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற மே மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நாளை இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிச்சைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்த நிலையில், இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.