லியோ படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி?.. அவரே கொடுத்த தெளிவான விளக்கம்!

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித்குமார் தயாரிப்பில் மாபெரும் பொருட்செலவில், அதே சமயம் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.
மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜெனனி குணசீலன், நடிகர் கதிர் மற்றும் ஜார்ஜ் மரியான் என்று பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? என்கின்ற ஒரு மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
தற்போது, தான் லியோ படத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதிபடக் கூறி தெளிவுபடுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. அவர் அண்மையில் பங்கேற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் இது குறித்து அவர் தெளிவாக விவரித்துள்ளார்.