லைகா நிறுவனம் போட்ட வழக்கு – நடிகர் விஷால் தயாரிக்கும் படங்கள் வெளியிட தடை!

நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான விஷால், லைகா நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய சுமார் 21.29 கோடி ரூபாயில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று கடந்த மார்ச் 8 2022ம் ஆண்டு நீதியரசர் வழங்கிய அந்த தீர்ப்பை, தற்பொழுது சென்னை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்து இந்த 15 கோடி ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் அவர் செலுத்தாவிட்டால் விஷால் நடத்தி வரும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் வட்டி இல்லாமல் ₹21.29 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் பேரில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஷால் போட்ட மேல்முறையீட்டை தற்காலிக தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி ஏற்க மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த 15 கோடி தொகையை நீதிமன்றத்தில் செலுத்தும் வரை அவர் தயாரிப்பு மட்டுமல்லாமல் அவர் நிதியுதவி செய்த திரைப்படங்களும் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.