குரங்குகளுக்கு ஓராண்டாக உதவி செய்து வந்த கூலித்தொழிலாளி..!
தஞ்சை மாவட்டத்தில் இருந்து, திருச்சி செல்லும் வழியில் உள்ளது வேங்கூர் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தான் கூழித்தொழிலாளி நடராஜன்.
அப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவின்றி அழைவதை அறிந்த இவர், அவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பின்னர், இதை தனது மனைவியிடம் கூறியதையடுத்து, அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, தனது வீட்டில் செய்யும் உணவில் குறிப்பிட்ட பகுதியை அந்த குரங்குகள் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிடுவாராம். பிறகு, அந்த உணவை குரங்குகள் உண்ணுமாம்.
இதுமாதிரி, ஒரு நாள், இரண்டு நாட்கள் இவர் செய்யவில்லை. கடந்த ஒரு ஆண்டுகளாக இவ்வாறு குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார். இந்த செயல் அப்பகுதி மக்களிடையே, பெரும் பாராட்டை பெற்று வருகிறது.