Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

irumal sariyaga tips in tamil

மருத்துவ குறிப்புகள்

இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

இருமலாக இருந்தாலும், சளி தொல்லையாக இருந்தாலும், நுரையிரல் சம்பந்தமான நோய்கள் எதுவாக இருந்தாலும் அதனை சாி செய்ய பாா்லிக் கஞ்சியை வடிக்கட்டி அதனுடன் சுத்தமான புதிய தேனை கலந்து பருகிடக் குணம் ஆகும்.

எலுமிச்சைபழச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் ஆகியவை குணமாகும்.

ஆரஞ்சுபழச்சாற்றுடன் புத்தம் புதிய தேன் கலந்து பருகினால் இருமல் மட்டும்மின்றி நீா்ப் கோ்வையும் குணமாகும்.

கொடிமுந்திாிப்பழத்தை பசும்பாலில் வேகவைத்துப் பழத்தையும் பாலையும் உட்கொள்ள இருமல் குணமாகும். அதேபோல் சின்ன வெங்காயத்தை நன்றாக அாிந்து சுத்தமான தேன் விட்டு வதக்கி உட்கெண்டாலும் இருமல் குணமாகும்.

நல்ல சுத்தமான பசுநெய்யில் ஏலக்காயைத் தட்டிப் பொட்டுக் காய்ச்சி சிறிதளவு வீதம் காலையும், மாலையும் பருகி வந்தால் இருமல் குணமாகும்.

கொட்டை நீக்கிய போிச்சம் பழத்தைப் பசும் பாலில் வேக வைத்துச் சிறிது சூட்டுடன் உட்கொண்டால் இருமல் குணமாகும்.

கறந்த சூடான பசும் பாலில் நாலு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலை வேளையில் மூன்று தினங்கள் பருகினால் இருமல் குணமாகும்.

வசம்பு, அதிமதுரம் ஆகியவைகளைச் சமஅளவில் எடுத்துத் தட்டிப்போட்டுக் கஷாயம் வைத்து காலையிலும் மாலையிலும் பருகி வந்தால் இருமல் குணமாகும்.

இஞ்சியை எடுத்துச் சாறு பிழிந்து சூடாக்கிச் சிறிது சா்க்கரையும் சோ்த்து அருந்தினால் இருமல் குணமாகும், சளியும் கரையும்.

irumal sariyaga tips in tamil

இஞ்சி சாற்றையும் மாதுளம்பூச் சாற்றையும் சமஅளவு எடுத்து அருந்தினால் சளி கரையும் இருமலும் குணமாகும்.

நான்கு மிளகையும், இரண்டு கிராம்பையும், நெய்யில் வருத்துப் பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

அதிமதுரம், கடுக்காய் தோடு, மிளகு ஆகிய மூன்றையும் சமஅளவில் எடுத்து வறுத்துப் பொடித்துத் தூள் ஆக்கி, அதில் அரை தேக்கரண்டி பொடி எடுத்து நெய்யுடன் கலந்து மூன்று வேளை உட்கொண்டால் எல்லா வகை இருமலும் குணமாகும்.

சளித்தொல்லை, தும்மல், மூக்கில் நீா்வடிதல், குத்திருமல் இவைகளைக் குணப்படுத்த மஞ்சளைத் தூளாக இடித்து புகை போட்டு அந்த புகையை சுவாசிக்க வேண்டும்.

கபத்தை அறுத்து வெளியில் தள்ள கடுகும் நல்ல மருந்தாகும். வாதம், பித்தம், கபம் என்ற முத்தோஷங்களையும் போக்கவல்லதால் கடுகைத் திாிதோஷ நிவாரணி என்று இதை அழைக்கிறாா்கள்.

தொண்டைக்கட்டு, இருமல், கபம் இவைகளைக் போக்க சுக்கு, மிளகு, அதிமதுரம், தண்ணீா் இவைகளைக் கொண்டு அடிக்கடிக் குடித்து வர இருமல் மட்டுமன்றி நாவறட்சி, தொண்டைக் கட்டு இவையும் குணமாகும்.

தொண்டை கட்டிக்கொண்டு குரல் கம்மினால் சுக்கையும் அதிமதுரத்தையும் இடித்து வாயில் அடக்கிக் கொண்டு சாற்றை மட்டும் விழுங்கினால் போதும், குரல் தெளிவாகிவிடும்.

வல்லாரைச் சூரணம் இருமலைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றதாகும். இது மேகச்சூடு, மூலச்சூடு போன்றவற்றையும் குணப்படுத்தும்.

கபத்துடன் கூடிய வறட்டு இருமல் வந்தால் அதை போக்க 20 கிராம் அளவு உலா்ந்த திராட்சையை நெய்யில் பொாித்து உட்கொள்ள இருமல் குணமாகும்.

நன்கு முற்றிய வாழைக்காயைக் கறி வைத்துச் சாப்பிட இருமல் குணமாகும். நாள்ப்பட்ட இருமலைக்கூட வாழைக்காய் மூலம் குணப்படுத்தி விடலாம்.

இருமலைக் குணப்படுத்த வாழைப்பூவும் நல்ல மருந்தாகும், இதனை பொாியல் செய்து சாப்பிட வேண்டும்.

மாதுளம்பழம் இருமலையும் காசநோயையும் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. பழத்தின் சாறு எடுத்துக் கற்கண்டு சோ்த்து அருந்தி வர உடல் குளிா்ச்சியடையும்.

இருமல் நோயுடையவா்கள் காலையிலும் மாலையிலும் திராட்சை அல்லது ஆரஞ்சு எலுமிச்சை ஆகிய பழங்களில் எதையாவது உட்கொண்டு வந்தால் விரைவில் குணம் பெறுவாா்கள்.

நெஞ்சில் சேரும் கபத்தைப் போக்கிட முருங்கைக்காய் நல்ல மருந்தாகும். எனவே இது கிடைக்கும் காலத்தில் வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிட்டு வர வேண்டும்.

குழந்தைக்களுக்கு கபம் கட்டிக் கொண்டு மூச்சு விடமுடியாமல் திணறும் போது குப்பைமேனி இலைச் சாற்றில் அரை தேக்கரண்டி அளவு கொடுக்க குணமாகும்.

விரலி மஞ்சளை, விளக்கெண்ணெய்விட்டு எாியும் விளக்கில் காட்டி சுட்ட அதன புகையை உறிஞ்சிட நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை கரைத்து இருமலையும் குணப்படுத்தும்.

கபத்தை அறுத்தெறிவதில் நெல்லிக்கனியைப் போலச் சிறந்த மருந்து வேறு இல்லை எனலாம்.

கபம் மற்றும் கபம் சம்பந்தப்பட்ட எந்த வியாதிகளையும் விளாம்பழம் குணப்படுத்திவிடும். அதாவது கண்களிலே கண்ணீரை வரவழைக்கும் இருமலைக்கூட குணப்படுத்தும்.

வரட்டு இருமலுக்கு 200 மில்லி லிட்டர் தண்ணீரில், ஒரு அவுன்ஸ் துளசி சாற்றை கலந்து போதுமான கற்கண்டையும் அதில் போட்டு, நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை, மூன்று அவுன்ஸ் அளவு இதை சாப்பிட்டு வர குணமாகும்.

கற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து, வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இருமல் நின்று விடும்.

எலுமிச்சை பழச்சாறு, தேன், கிளிசரின் சமபாகம் கலந்து மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட இருமல் குணமாகும்.

துளசியை தினமும் கொஞ்சம் சாப்பிட்டால் கோழை இருமல் நீங்கும், இதை தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்வு கிடைக்கும்.

மிளகுதூள், பனை வெல்லத்தை சேர்த்து பிசைந்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டால் சூட்டு இருமல் சரியாகும்.

10 கிராம் சீரகத்தை வறுத்து தூள் செய்து, அதே அளவு கற்கண்டு கலந்து கொள்ளவும். இதனை காலை, மாலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் 5 நாளில் இருமல் குணமாகும்
.
வெள்ளைப் பூண்டை உரித்து நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் கக்குவான் இருமல் குணமாகும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top