நிவாரண உதவி..! யார் யாருக்கு ரூ.1000 கிடைக்கும்..? இதோ முழு தகவல்..!
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு இருந்து வருகிறது. இதனால், பலரும் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, இன்று நிவாரண உதவி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. அரசு அலுவலர்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று பணம் அளித்து வருகின்றனர்.
எந்ததெந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
1. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள்
2. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.
3. திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.
4. செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.