திருமணமாகிய பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் வைக்கின்றனர்..?

திருமணமாகிய பெண்கள், தங்களுக்கு திருமணமாகிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில், சில விஷயங்களை பின்பற்றுகின்றனர். அதாவது, மெட்டி போடுவது, தாலிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்கள். இதில், ஒன்று தான் நெற்றி வகிடில் குங்கும் இட்டுக்கொள்வது. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் சிலவற்றை பற்றியும், இதற்கான ஐதீகமாக நம்பப்படும் விஷயங்கள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.

குங்குமம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்த்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி இயற்கை முறையில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது.

ஐதீகங்கள்:

குங்குமம் என்பது சிந்து சமவெளி நாகரீகத்தின் முன்னால் இருந்தே நமது கலாசாரத்தில் இருந்து வந்துள்ளதாம். 4000 ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் நம்மிடையே, தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதாகவும், சில குறிப்புகள் தெரியவந்துள்ளது.

குங்குமம் பொதுவாக சிவப்பு நிறத்தில் தான் தயாரிக்கப்படுகிறது.. இந்த சிவப்பு நிறம், சிவனி;ன் மனைவி பார்வதியை குறிப்பதால், அந்த அம்மனின் அருளைள பெண்கள் பெறுவதற்காகக, குங்குமம் இடுவதாhக கூறப்படுகிறது.

திருமணமாகிய பெண்கள், தங்களது நெற்றியிலும், முடி வகிடிலும், குங்குமம் வைத்துக் கொள்வதால், அவர்களது கணவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

புராணத்தில் நெற்றியில் இடும் குங்குமத்தை தீபத்தின் ஜூவாலையின் வடிவில் கிருஷ்ணரை எண்ணி ராதா மாற்றியதாக சொல்லப்படுகிறது. லலிதா சஹஸ்ஹரநாமம் மற்றும் சவுந்தர்ய லஹரி ஆகியவையில் குங்குமம் குறித்து மிக உயர்வாக சொல்லப்பட்டிருக்கிறது.

அறிவியல்:

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குங்குமத்தை நெற்றியில் இடுவதன் மூலம், கர்ப்பப்பை உறுதியடைவதாக சொல்லப்படுகிறது.

நெற்றியில் இருக்கும் நரம்புகளை குங்குமம் வைப்பதன் மூலம் தூண்ட முடியும். இதனால், குழந்தை பேறு இல்லாமல் தவிப்பவர்களுக்கு, விரைவில் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

மனித உடலில் தனித்துவமான பகுதி என்றால் அது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதிக்கு தனி கவனம் செலுத்துவதுண்டு. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு பெண்கள் குங்குமத்தை இட்டால் மன அமைதி கிடைக்கும். நெற்றியில் குங்கும் இடுவதன் மூலம், மூளைக்கு செல்லும் சூடு தடுக்கப்படுகிறது.

மேற்கண்ட அறிவியல் காரணங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் எப்போது சொல்லிவிட்டு சென்றவை தான். அவற்றை ஆண்மீகம் என்று கருதாமல், அறிவியல் என்று கருதினால், நன்மை வரும்.

Recent Post