மோதிர விரலில் தங்கம் மோதிரம் அனிவது ஏன்?

தங்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்காதது. மேலும் மருத்துவ குணம் கொண்ட உலோகம் ஆகும்.

நாம் மோதிரைத்தை நமது இடது கையில் உள்ள மோதிர விரலில் அணிந்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் நமது இடது கையில் உள்ள மோதிர விரலில் ஓடும் நரம்பு ஒன்று இதயம் வரை செல்கிறது. அதனால் இடது கையின் மோதிர விரலில் மோதிரத்தை அணிந்து கொண்டால் இதயத்திற்குச் செல்லும் நரம்பை சீர்ப்படுத்தி விடுகிறது.

இதயத்திற்குச் செல்லும் நரம்பிற்குப் பாதுகாப்பையும், பலத்தையும் அளிக்கிறது. இதன் காரணமாகவே பழங்காலத்தில் மக்கள் தங்க மோதிரத்தை இடது கையின் மோதிர விரலிலேயே அணிந்து வந்தார்கள்.

Advertisement

காதிலும், மூக்கிலும் துளையிட்டு கம்மல், மூக்குத்தி அணிந்து கொள்வதும் இதன் மருத்துவக் குணத்துக்காகத்தான்.

காதிலும், மூக்கிலும உள்ள நரம்புகளுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

கழுத்தில் அணிந்திருக்கும் செயின் போன்றவைகள் மூளைக்கு செல்லும் நரம்புகளை சீர்ப்படுத்தி வலுவடைய செய்கிறது.

தங்கத்தின் மருத்துவக்குணம் அறியாதோர் நம்மில் பல பேர் உண்டு என்பது ஒரு நிதர்சனமான உண்மை.