‘யாரோ’ திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் பல சைக்கோ கில்லர் கதைகள் வந்துள்ளன. அந்த வரிசையில் யாரோ திரைப்படமும் வெளிவந்துள்ளது. வெங்கட் ரெட்டி, உபாசானா இதில் நடித்துள்ளனர். சந்தீப் சாய் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நாயகன் வெங்கட் ரெட்டி சென்னையில் கடலோரத்தில் உள்ள ஒரு பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக உணருகிறார். அந்த வீட்டிற்கு அடிக்கடி யாரோ வருகிறார்கள் என பயப்படுகிறார்.
இதற்காக நண்பன் மூலமாக ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியை நாடுகிறார். அவர்கள் வீட்டை ஆய்வு செய்துவிட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை.

அறிமுக நடிகர் வெங்கட் ரெட்டி முதல் படத்திலேயே ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். படத்தின் கதாநாயகி உபாசானா ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்களை வைத்து எடுத்திருந்தால் யாரோ படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும்.
ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசை ஓரளவு பொருந்துகிறது. KB பிரபுவின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். படம் முழுவதும் மெதுவாக செல்கிறது. கடைசி பத்து நிமிட கதைக்காக 1 மணி நேரம் 43 நிமிடங்களுக்கு படம் செல்கிறது.
மொத்தத்தில் ‘யாரோ’ யாருக்கோ.
