Search
Search

சிலம்பரசனின் அடுத்த படம் ரெடி?.. STR49 படத்தை இயக்கப்போவது “அவர் தான்”!

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சிலம்பரசனின் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி காணாத நிலையில், கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியான பத்து தல திரைப்படம் STR அவர்களுக்கு ஒரு Come Back கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.

ஒபேலி N கிருஷ்ணன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இது சிலம்பரசனின் 48வது திரைப்படம், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் அவருடன் இணைய உள்ளார் என்ற ஒரு அனுமானமும் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் இந்த படமே இன்னும் முடிக்கப்படாத நிலையில், சிம்புவின் 49வது திரைப்படம் குறித்து அறிவிப்புகள் வர தொடங்கியுள்ளது.

அஜித் அவர்களின் 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தை தற்பொழுது இயக்கி வரும் மகிழ் திருமேனி தான் சிம்புவின் 49வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. AK 62 படப்பிடிப்பு முடிந்தவுடன் சிம்பு பட வேலைகள் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

You May Also Like