Search
Search

இந்த மேடம் யாருனு தெரியுதா மக்களே? – 80களில் தமிழ் சினிமாவை தன் விழியில் கட்டிவைத்த கண்ணழகி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் அசத்திய ஒரு நடிகை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. 1980களில் இவர் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரை உலகில் 1976ம் ஆண்டு அறிமுகமான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் இவர் முதன் முதல் அறிமுகமான திரைப்படம் புதிய தோரணங்கள்.

தில்லு முல்லு, கர்ஜனை போன்ற படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த இவர் ராஜபார்வை, எல்லாம் இன்பமயம் போன்ற பல படங்களில் உலக நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இன்றும் பலரால் பாராட்டப்படும் ஹிந்தி படமான ஏக் துஜே கேலியே படத்தில் கமலுடன் இணைந்து நடித்த நாயகி இவர்தான்.

நிச்சயம் இந்நேரம் இவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள், ஆம் இவர் தான் நடிகை மாதவி. தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தன் கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, 27 ஆண்டுகள் நாம் இணைந்து வாழ்கின்றோம், நீங்கள் எனக்கு அளித்த அன்பிற்கும், மகிழ்ச்சிக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தற்பொழுது மாதவிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், 1976ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்த இவர் சர்மா என்பவரை 1996ம் ஆண்டு மணமுடித்தார்.

You May Also Like