Search
Search

வாவ் ஜோதிகா மேடம்.. மெய்சிலிர்க்க வைக்கும் ஒர்க் அவுட் – வைரலாகும் வீடியோ!

வாலி திரைப்படத்தின் மூலம் கடந்த 1999ம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான நாயகி தான் ஜோதிகா. அந்த படத்தில் கதையின் நாயகி இல்லை என்றாலும் அதே ஆண்டு சூர்யா நடிப்பில், வசந்த் இயக்கத்தில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் தன் கணவரோடு நாயகியாக களம் இறங்கினார்.

அதன் பிறகு தளபதி விஜய் அவர்களுடன் குஷி, உலக நாயகன் கமல் அவர்களுடன் தெனாலி என்று அடுக்கடுக்காக அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக மாறியது. தமிழில் உள்ள அத்தனை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் 2006ம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் 2009ம் ஆண்டு வெளியான சீதா கல்யாணம் என்ற மலையாள திரைப்படத்தில் தோன்றிய அவர் அதன் பிறகு சுமார் 6 வருட காலம் தனது சினிமா வாழ்க்கைக்கு சற்று இடைவெளியை கொடுத்தார்.

அதன்பிறகு 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைத்துறையில் களமிறங்கி தற்பொழுது பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மேலும் கடந்த சில காலமாகவே உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா தற்பொழுது இன்னும் அதிகமான பிட்னஸ்க்கு தயாராகி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

You May Also Like