என் மார்க்கெட் சுத்தமா காலி.. பாபா திரைப்படம் தான் அதற்கு காரணம் – மனம் திறந்த மனீஷா

மனீஷா கொய்ராலா, இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த ஒரு மிகசிறந்த நடிகை, நேபாளில் பிறந்த இவர் 19 வயது முதல் நடித்து வருகின்றார். இவர் நடித்த முதல் திரைப்படம் இவர் தாய் மொழி திரைப்படமாகும். அதன் பிறகு ஹிந்தி படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத்துவங்கியது.
சுமார் 6 ஆண்டுகள் கழித்து முதன் முதலில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பாம்பே திரைப்படத்தில் அரவிந்தசாமியின் ஜோடியாக தோன்றி நடிக்க இவருக்கு விருதுகள் குவியத்துவங்கியது. இன்றளவும் அந்த படத்திற்கும் மனீஷா நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம்.
மனீஷாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்தபோதும் இந்தியன், முதல்வன், ஆளவந்தான் என்று வெகு சில படங்கள் மட்டுமே நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புதான் பாபா.
ஆனால் பாபா படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் ஓடவில்லை, குறிப்பாக அந்த படத்தில் மனீஷாவின் கதாபாத்திரம் பணத்திற்கு அடிமையாகும் பெண்ணாக இருந்த நிலையில் அந்த படம் அவருக்கு பெரிய இழப்பை தந்தது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தமிழ் மொழில் தனக்கு பாபா திரைப்படம் மிகப்பெரிய சோதனையை அளித்த திரைப்படம் என்றும் தனக்கு அந்த படத்திற்கு பிறகு மிகப்பெரிய மார்க்கெட் சரிவு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.