இந்தியாவில் ஒரே நாளில் 6654 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6654 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720. இதுவரை 51784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Advertisement