தவறான உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கையால் பொடுகு, முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.
முடி வளர்ச்சிக்கு பல வகையான பொருட்கள் உள்ளது. கூந்தலில் தயிரை தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் தயிரை தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து முடியை வலுவாக்கும்.
தினமும் தலையில் தயிர் தடவி வந்தால் முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். மேலும் பொடுகு பிரச்சனை நீங்கும்.
தயிரில் புரோட்டின் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. கூந்தலுக்கு தயிரை பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சிலருக்கு சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்படும். அவ்வாறு உள்ளவர்கள் கூந்தலுக்கு தயிரை பயன்படுத்த வேண்டும். இது கூந்தலுக்கு ஊட்டமளித்து மீண்டும் கருப்பாக்க உதவுகிறது.
கூந்தலில் தயிரை எப்படி தடவுவது?
முதலில் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து முடியின் வேர்களில் தயிர் தடவவும். கூந்தலில் தயிர் காய்ந்ததும், உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.