சிக்கனில் உயர்தர புரதம் உள்ளது, இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால், உண்மையில் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் அபாயகரமான அளவில் வெப்பம் அதிகரிப்பதில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கனில் அதிகமான புரதம் உள்ளது. இதை உடல் ஜீரணிக்கும்போது சிலருக்கு சிறிது வெப்பம் அதிகரிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இது இயல்பானதுதான்.
அதிக எண்ணெய், காரம், மசாலா சேர்த்து சமைக்கப்படும் சிக்கன் உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், எளிதாக ஜீரணிக்கக்கூடிய முறையில் சிக்கன் சமைத்து சாப்பிட வேண்டும்.
சிக்கனை அளவோடு சாப்பிடும் போது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிகமாக சாப்பிடுவது, எந்த உணவாக இருந்தாலும், உடலில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.