40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..!

40 வயது நிரம்பிய பெண்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்தும், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக பார்க்கலாம்.

40 வயதை கடந்த பெண்கள்:

40 வயதை கடந்த பிறகு தான், நாம் உண்மையான வாழ்க்கைக்குள் நுழைகிறோம்.. இது வாழ்க்கையின் ஆரம்பம் என்று பலரும் கூறுவார்கள். இந்த கூற்று ஒரு புறம் இருந்தாலும், பலருக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதும் இந்த வயதில் இருந்து தான். குறிப்பாக பெண்கள் தான், 40 வயதை கடந்த பிறகு அதிக அளவில் உடல்நலக்கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

Advertisement

இளம் வயதில் சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்றாதவர்கள், 40 வயதை கடந்த பிறகு அதிக பாதிப்புகளை சந்திப்பார்கள். எனவே, இளம் வயதில் இருக்கும் பெண்களே, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவற்றை தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உணவில் ஏதாவது ஒரு முழு தானியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டுமின்றி, தினமும் ஏதேனும் ஒரு வகை பழத்தை சாப்பிட்டு வருவது கூடுதல் நலம்.

கொழுப்பு அதிகமாக இல்லாத உணவுப் பொருட்களையும், கோழி இறைச்சி, கடல் உணவுகள், முட்டை போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டியவை. எனவே சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

சாப்பிடும் அளவிற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், குறைந்தது 8 மணி நேரமாவது நிம்மதியாக தூங்குங்கள், தியானம் செய்யுங்கள், காலை உணவை தவிர்க்காமல், தினமும் கட்டாயம் சாப்பிடுங்கள். முக்கியமாக தண்ணீரை நிறைய குடியுங்கள்.

முறையான வழியில் தங்களது உடல்நலத்தை பேனிக்காக்கவில்லையெனில், உடல்எடை அதிகரிப்பு, மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை நோய், சிலவகை புற்றுநோய்கள் போன்ற பல உடல் உபாதைகளுக்கு பெண்கள் ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே, இன்றில் இருந்து மாற்றத்தை தொடங்குங்கள்.