ஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்

ஞானம் என்பது நம் உணர்வின் முக்கிய அம்சமாகும். ஞான முத்திரை செய்வதற்கு பத்மாசனம் சிறந்தது. பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கட்டை விரல் நுனியை ஆட்காட்டி விரல் நுனியால் தொடுங்கள். மெதுவாக அழுத்துங்கள். மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடி இருக்கவேண்டும். இந்த ஆசனத்தை 48 நிமிடங்கள் செய்யலாம். குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது இதனை செய்யவேண்டும்.

ஞான முத்திரையின் பலன்கள்

  • ஞானம் வளரும்.
  • நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • மன அமைதியும் உற்சாகமும் கிடைக்கும்
  • மூளையில் உள்ள நரம்புகள் வலிமை பெரும்.
  • மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு அதிகரிக்கும்.
  • நல்ல உறக்கம் கிடைக்கும்.