நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது. இது ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கை வைத்திய முறைகளில் பரிந்துரைக்கப்படும் பழக்கமாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ நன்மைகள் வெறும் மலச்சிக்கல் தீர்வு மட்டுமல்லாமல், உடல் எடை குறைப்பு, தோல் பிரச்சனைகள், வயிறு சார்ந்த நோய்கள் என பலவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.
1. மலச்சிக்கலை குணப்படுத்தும்
வெதுவெதுப்பான நீர் குடிப்பது, குடலின் இயக்கத்தை தூண்டுகிறது. இது வயிற்றை இயற்கையாகத் தூண்டி மலச்சிக்கலை தீர்க்கும்.
2. உடலை டிடாக்ஸ் செய்யும்
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது, உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மைகளை வெளியேற்றும். இதனால் உள் உறுப்புகள் சுத்தமாகும்.
3. எடை குறைக்க உதவும்
வெந்நீர் குடிப்பது, உடல் வெப்பநிலையை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்கிறது. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைய உதவுகிறது.
4. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
தொடர்ச்சியாக வெந்நீர் குடிப்பதால், உயர் இரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.
5. முகம் மற்றும் தோலுக்கு பளிச்சென்று பொலிவும், ஆரோக்கியமும்
தோலில் காணப்படும் பிரச்சனைகள், முகப்பரு, இறுகிய தோல் போன்றவை வெந்நீர் மூலம் குணமாகும். உடல் சுத்தமாகும் போது முகத்திலும் அந்த ஒளி தெரியும்.
6. மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் வலிக்குப் பெரிய நிவாரணம், காலையில் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் கிடைக்கிறது. இது வயிற்று தசைகளை தளர்த்துகிறது.
7. கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்கும்
பல ஆய்வுகள் தெரிவிப்பது போல, வெந்நீர் குடிப்பது அதிக கொலஸ்ட்ராலை குறைத்து இதயநோய் அபாயத்தை குறைக்கும்.
8. ஜலதோஷம், சளி, தொண்டை வலி நீக்கும்
வெதுவெதுப்பான நீர், சளியை கரைத்து வெளியேற்றுகிறது, தொண்டை வலியை குறைக்கிறது. இது முழு சுவாச அமைப்புக்கும் நன்மை தரும்.
9. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்
இரவில் தூங்கும் நேரத்தில் உடல் தண்ணீரை இழக்கிறது. காலையில் வெந்நீர் குடிப்பது உடலை மீண்டும் நீரேற்றமாக வைத்திருக்கும்.
10. ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வெந்நீர் குடிப்பது ஒரு சிறிய பழக்கம் என்றாலும், இது உடல் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது. இது ஒரு ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அடிப்படை.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிக்கிற பழக்கத்தை இன்று தொடங்குங்கள். இது உங்கள் உடலுக்கு ஒரு இயற்கையான மருந்தாக செயல்படும். எடை குறைக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கும், மலச்சிக்கல், தோல் பிரச்சனை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் இது ஒரு எளிய தீர்வாக அமையும்.