Texas நகரில் நடைபெற்ற விழா.. மாமனிதன் படத்திற்கு உலகத்தரம் வாய்ந்த விருது!

பிரபல நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான “கூடல் நகர்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர்தான் சீனு ராமசாமி. அதன் பிறகு 2010ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை” ஆகிய படங்களை, பிரபல நடிகர் விஜய் சேதுபதியைக் கொண்டு ஹிட் கொடுத்தார். தர்ம துரை வெற்றியை அடுத்து 2017ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி அவர்களுடைய நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் “மாமனிதன்”.
ஆனால் சுமார் ஐந்து ஆண்டுகால முயற்சிக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான மாத்திரத்திலேயே ரசிகர்கள் தரப்பிலிருந்தும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தொடர்ச்சியாக பல பன்னாட்டு விருதுகளையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் Texasல் உள்ள Houston நகரில் நடைபெற்ற 56வது Worldfest Houston International film festival விழாவில் Best Family & children feature film விருது மாமனிதன் இயக்குநர் சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்த சில தகவல்களை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்