ஆந்தைகள் பற்றி சில உண்மைகள்

ஆந்தைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. ஆந்தை பறவையை பேய், பூத பிசாசுகளோடு ஒப்பிட்டு அதை ஒரு துஷ்ட பறவையாக சித்தரித்து விட்டனர். இதனால் ஆந்தைகள் காரணமின்றி கொல்லப்பட்டிருக்கின்றன.

ஆந்தைகள் காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் வாழ்கிறது. ஆந்தைகள் 1 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்டவை.

பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளை விட பெரியதாக இருக்கும். இந்து மத புராணங்களில் ஆந்தையை லட்சுமி தேவியின் வாகனமாக கருதப்படுகிறது.

இந்தியாவின் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று.

மேலை நாடுகளில் ஆந்தை, ஞானத்தின் சின்னமாகவும் அறிவின் சின்னமாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் பல கல்வி நிறுவனங்கள் ஆந்தையின் சின்னத்தை வைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் அதை கெட்ட ஒரு சகுனத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் ஆந்தை அலறினால் “யாரோ இறக்கப் போகிறார்கள்” என்று பேசிக் கொள்வது வழக்கம்.

மற்ற பறவைகள் பறக்கும் போது படபடவென ஓசை எழுப்பும். ஆனால் ஆந்தையின் இறக்கைகள் மிக மென்மையாக இருப்பதால் பறக்கும்போது ஒலியை எழுப்பாது.

இறக்கைகள் மிருதுவாக இருப்பதால் மழையின் போது பறக்க முடியாமல் போய்விடும். ஆந்தை தனது கழுத்தை 359 டிகிரி அளவுக்கு சுழற்றும் தன்மையுடையது.

ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் ஒளியை கவனித்து வேட்டையாடக் கூடியவை.

ஆந்தைகள் தனது இறக்கைகளை பயன்படுத்தி தண்ணீரில் கடினமாக நீந்தக் கூடிய தன்மை கொண்டது.

பெரும்பாலான ஆந்தைகள் பகலிலும் விழித்திருந்து இரையை தேடும்.

கியூபாவில் வசித்துவந்த 3.6 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆந்தை கியூபா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கொடிய வகை ஆந்தைகள் வருடத்திற்கு 6000 எலிகளை உண்ணும். இதனால் விவசாயிகளுக்கு எலித் தொல்லை இருக்காது.

ஆந்தை கால்களில் உள்ள நீளமான வலுவான நகங்களை பயன்படுத்தி இறையை வேட்டையாடி சாப்பிடும். பனி ஆந்தைகள் 3000 மைல் தூரம் வரை நிற்காமல் பறக்கும் திறமை கொண்டது.