Search
Search

கோவிலுக்குள் ஷார்ட்ஸ் போட்டு சென்ற பெண்.. ஆவேசம் அடைந்த நடிகை கங்கனா!

கங்கனா ரனாவத், தற்பொழுது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் இவரும் ஒருவர். தற்பொழுது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையான பல கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகிறார் என்று நான் கூற வேண்டும். ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில், பெண் ஒருவர் ஷார்ட்ஸ் அணிந்து கோவிலுக்குள் சென்றதாக இணையத்தில் வெளியான ஒரு புகைப்படத்தை மேற்கோளிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “இது போன்ற ஆடைகள் மேற்கத்தியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை, இதை அணிந்து கோவிலுக்குள் செல்பவர்கள் சோம்பேறிகள், கோமாளிகள், அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை”. “இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு முறை தான் வாடிகன் நகருக்கு மாடர்ன் டிரஸ் அணிந்து சென்ற பொழுது, தன்னை அந்த வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை என்றும், மீண்டும் தான் தனது ஹோட்டலுக்கு சென்று ஆடைகளை மாற்றி வந்த பிறகு தான் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like