பெண்கள் தங்களின் சருமத்தை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது.
குறிப்பாக ஜிம்முக்கு செல்லும் பெண்கள் ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப்பை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வழிவதால் அதில் இருக்கும் ரசாயன கலவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடக்கூடாது. இதனால் சரும பாதிப்புகள் ஏற்படுத்தும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு மேக்கப் போட்டுக்கொள்ளலாம்.
நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் மேக்கப்பில் கலந்து சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
முகத்தை நன்றாக கழுவிய பிறகு மேக்கப் செய்வது சருமத்திற்கு நல்லது. இது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும்.
ஒருவர் பயன்படுத்திய லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது.
மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. ஏனென்றால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.